நல்ல விஷயம். படித்தல் கடினமே. ஆனால், கடினங்கள் பல உருகக்கூடும். கடியதொன்று அடுத்து ஊரவும் கூடும். உத்தரவாதமில்லை.
கடியது நீக்கலும், நிறை போற்றலும் கற்ற வருக்கு அழகு.
edcare.org.in Education Care Rehabilitation Organization
இந்திய விமானப்படை பயிற்சியில் நான் சேரும்போது, அங்கே இருந்த ஒரு வாசகம்:
“The More You Sweat in Peace, the Less You Bleed in War.”
இதை மேற்கொள்காட்டி பலமுறை எது நிஜம், போரா அமைதியா, இருளா ஒளியாகுழப்பமா தெளிவா, அச்சமா அச்சமின்மையா என்ற விவாதங்களை நான் நிகழ்த்தி இருக்கிறேன்.
இதே விவாதத்தை, நான் ஒரு பெரும் மேலாண்மை கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் பேராசிரியராக, மென்திரன் பயிற்றுநராக, ஆட்ருனராக பணிபுரிகிகையில் வேறு விதமாக கையாண்டும் இருக்கிறேன்.
எது நிஜம், பணியமர்வா பணியின்மையா?
நான் அறிந்தவகையில், போரும், இருளும், இடரும் என்ற வகையில், பணியின்மையும்தான் நிஜம் என்று விவாதம் முடித்திருக்கிறேன்.
ஒரு இராணுவ வீரனாக சொல்கிறேன்: அமைதி என்பது, போர் நிறுத்தத்தை போன்றது, அது அடுத்த போருக்கு ஆயத்தம் செய்வது.
ஒரு உளவியளாராக சொல்கிறேன், தெளிவு என்பதும் அச்சமின்மையும் மாயை. அந்த மாயையை ஆண்டு தெளிவு பெறுதல் என்பது, அடுத்த மாயையை தேடுதலாகும். எந்த அறிஞனுக்கும் தான் கண்ட தெளிவில், தான் மீண்ட அச்சத்தில், பற்று இருக்க முடியாது. ஒவ்வொரு அறிஞனும் இருளை நோக்கி, இடர் தேடி, சிக்கல் தேடி, அச்சம் நாடி உழைக்கிறான். அந்த சிறிய நேரம் கிடைத்த ஒளியும் தெளிவும் அமைதியும் சற்றே அவனை இளைப்பாற்றுகிறது. ஆனால் அந்த மாயையில் அந்த மனிதன் நிலைத்திருந்தால், அவன் அறிஞனாகியிருக்க முடியாது.
சமூகவியலாகராக சொல்கிறேன்: பதட்டமும் பணியின்மையும்தான் நிஜம். படத்தமின்மையும் பணியமர்வும் ஒரு சிறு இன்பம். சிற்றின்பங்கள் நீடித்தல், சமூக வளர்ச்சிக்கும், தனிநபர் ஆளுமைக்கும் நன்மை பயக்காது. மாறாக சிற்றின்பங்கள், சமூகத்தையும் தனி மனிதனுக்கும் கேடு விளைவிக்கும்.
ஆகவே, இந்த பணியின்மையும், இந்த தெளிவின்மையும் இந்த இடறும் தான் நிஜம். இவ்வேளையில், பணியமர்வின்போதும், ஒளியின்போதும் அமைதியின்போதும் தயார் ஆகாதோர், இப்போது இந்நிலையில் தயாராகவும்.
ஆற்றுபவலாளராக கூறுகிறேன்: முயற்சி உடையோருக்கு, இருளுள் ஒரு ஒளியும், போரில் ஒரு அமைதியும், பதட்டத்தில் ஒரு தெளிவும், பணியின்மையில் ஒரு பணியும் காணக்கிடைக்கும். அந்த தருணம்தான் நிஜம். இந்த தருணத்தை தேடிதான் (Twilight) பல யோகிகளும், ஞானிகளும், அறிஞரும், படைப்பாளிகளும் உழைக்கின்றனர். அந்த ஒளிவட்டம், அந்த தெளிவுத்திரை, அந்த அமைதிக்கணம், அந்த சிந்தனைப்புள்ளி அனைவருக்கும் பொது.