Spread the love
RTE சட்டத்தின்கீழ் பள்ளி சேர்க்கைக்கு பள்ளியிலிருந்து ஒரு கிமீ தொலைவில் வாழும் குழந்தைகளுக்கு மட்டுமே தகுதியானவர் என்ற நடைமுறை இப்போது தெரியவருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை. ஆனால், வலைதள விண்ணப்பத்தில், பள்ளி தேர்வு பிரிவில், இதை அனுமானிக்க முடிகிறது:

RTE Right to Education Edcare
இதேபோல், குடும்ப வருமானம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை. ஆனால் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் ஆண்டுக்கு இரண்டு லட்சம் வருமான வரம்பு என்று கூறுகின்றனர். தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள், 2011 இன்படி ஒருசில பிரிவுகளும் உரிமைகளும் இருப்பதாக எட்கேர் கல்வி பாதுகாப்பு புணர்வாழ்வு அமைப்பு அறிந்து, தனது ஆய்வை துவங்கியது. தொலைதூறங்களில் வாழும் குழந்தைகளுக்கு, RTE இணையத்தில் பள்ளிகள் பட்டியலிப்படாதது, பள்ளி இல்லாத காரணமா, தூரவரம்பு நிர்ணய காரணமா அல்லது தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள், 2011 இல் உள்ள பிரிவுகளில் யேதேனும் குறையோ என்றும்கூட யோசிக்க தோன்றியது.
தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள், 2011 இன்படி ஒருசில பிரிவுகளும் உரிமைகளும் இருப்பதாக எட்கேர் கல்வி பாதுகாப்பு புணர்வாழ்வு அமைப்பு அறிந்து, தனது ஆய்வை துவங்கியது. தொலைதூறங்களில் வாழும் குழந்தைகளுக்கு, RTE இணையத்தில் பள்ளிகள் பட்டியலிப்படாதது, பள்ளி இல்லாத காரணமா, தூரவரம்பு நிர்ணய காரணமா அல்லது தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள், 2011 இல் உள்ள பிரிவுகளில் யேதேனும் குறையோ என்றும்கூட யோசிக்க தோன்றியது.
எட்கேர் ஆய்வில், கீழ்கண்ட மூன்று கூகுள் முகவரிகளுக்கு பள்ளிகள் ஏதும் பட்டியலிடப்படவில்லை. 1. சூரியூர், 620025, 2. பட்டாம்பூச்சி பூங்கா, பாலூர், 620101 3. கருமலை அரசு மருத்துவமனை அருகில், 621004 ஆகவே, அப்பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள், 2011 மறுக்கப்பட்டதா என சிந்திக்க தோன்றுகிறது. இதன் காரணம் சட்டவிதிகளா என்றும் யோசிக்க தோன்றுகிறது. அதேசமயம் திருச்சி விமான நிலையம், 620007 முகவரிக்கு இரண்டு பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வித்தியாசங்கள், தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள், 2011க்கு ஏற்புடையதுதானா என பார்ப்போம்.

தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள், 2011, பிரிவு 4 (1) சுற்றுப்புறத்தை வரையறுக்கிறது, பிரிவு 4 (4), பள்ளிக்கு அதிக தூரத்தில் உள்ள குழந்தைகளுக்கு போக்குவரத்து மற்றும் தங்குமிடம் பற்றி கூறுகிறது. பிரிவு 4 (5) உள்ளூர் அதிகாரம் பற்றி கூறுகிறது. AEEO அல்லது சம்பந்தப்பட்ட DEO உடன் கலந்தாலோசிப்பது, மற்றும் குழந்தைகளை அனுமதிக்கக்கூடிய அண்டை பள்ளியை அடையாளம் காணும் பணிகளை கூறுகிறது. பிரிவு 5(2) தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட அனைத்து குழந்தைகளையும் அடையாளம் காண பணித்து, சுற்றுப்புற வரம்பில் பள்ளிகள் இல்லாதபோது, அக்குழந்தைகளுக்கு பிரிவு 4 ன்கீழ் வேண்டியவன செய்திட உத்தரவிடுகிறது.

ஏற்கனவே தூர தூர கிராமங்களுக்கும் சாலைகள் அமையப்பெற்று பேருந்துகளும் இயக்கப்பட்டு, பள்ளி குழந்தைகளுக்கும் மகளிருக்கும்கூட இலவச பயண வழிவகை செய்யப்பட்டு இருக்கும் வேளையில், தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள், 2011ஐ அமல்படுத்தி, 1 கிலோமீட்டர் என்ற எல்லைக்கு அப்பால் வாழும் குழந்தைகளுக்கு நன்மை பயக்கலாமே. தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள், 2011, வகுப்புகள் 6 முதல் 8 வகுப்பு குழந்தைகளுக்கும் வரையறுக்கப்பட்டு இருக்கும் வேளையில், வேண்டியன அக்குழந்தைகளுக்கும் செய்திடலாமே. ஒரு கிலோமீட்டர் தூர எல்லை குறித்திருப்பதில் யேதேணும் பிற காரணங்கள் இருப்பினும், விண்ணப்பிக்கும் வேளையிலே தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள், 2011 குழந்தைகளுக்கு அளித்திருக்கும் உரிமையை பறிப்பதும், மறுப்பதும், தவிர்ப்பதும் எப்படி நியாயமாகும் என்று எட்கேர் கல்வி பாதுகாப்பு புணர்வாழ்வு அமைப்பு வினவுகிறது.